விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகி உள்ள ரஜினியின் “2.0” படத்தின் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
லைகா புரோடக்சன்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்சய் குமார், ஏமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் “2.0”. பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே “2.0” படத்தின் டீசர், விநாயகர் சதுர்த்தி தினமாக இன்று வெளியாகியுள்ளது. படத்தின் டீசர், யூ டியூப்பில் 2D-ல் வெளியான நிலையில், திரையரங்கில் 3D-ல் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை, டீசர் மேலும் அதிகப்படுத்தி உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். எந்திரன் படத்தின் 2ஆம் பாகமாக “2.0” படம் தயாராகி உள்ளது. ரூ.542 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரான படமாகும். வரும் 29ஆம் தேதி “2.0” படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.