சைபீரியாவில் 18 ஆயிரம் ஆண்டுகளாக பதப்படுத்தப்பட்ட நாய்க்குட்டியின் சடலம் கண்டெடுப்பு

ரஷ்யாவில் உள்ள சைபீரியா பகுதியில் 18 ஆயிரம் ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட நாய்க்குட்டியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குளிர்பிரதேசமான சைபீரியா பகுதியில் அண்மையில் அரிய வகை விலங்கை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அந்த விலங்கு அண்மையில் உயிரிழந்தது போன்றும், பற்கள் மற்றும் முடிகள் ஆகியவையும் காணப்பட்டது. இதனையடுத்து அதனை ஆராய்ச்சிக் கூடத்திற்கு அனுப்பி ஆய்வு செய்த போது அந்த விலங்கு 18 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆண் விலங்கு என்று தெரியவந்தது. ஆனால் அந்த விலங்கு நாயா அல்லது ஓநாயா என்று கண்டுபிடிக்க முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் திணறி வந்தனர். ஒரு கட்டத்தில் அது பப்பி நாய் என்று முடிவு செய்த ஆராய்ச்சியாளர்கள் டோகர் (( Dogor)) என்று பெயர் சூட்டி செல்லமாக அழைத்து வருகின்றனர். ரஷ்யா மொழியில் டோகர் என்றால் தோழர் என்று தெரிவித்துள்ளனர்.

Exit mobile version