வீகன் உணவு முறையால் இறந்த 18 மாத பச்சிளம் குழந்தை..

வீகன் எனும் உணவு முறையைப் பின்பற்றியதால் 18 மாத பச்சிளம் குழந்தை இறந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்பு உணவு முறையில் சைவம் அசைவம் என்று இரண்டு தான் இருந்தது. ஆனால் தற்போது புதிதாக வீகன் உணவு முறை என்பதை அனைவரும் பின்பற்றி வருகின்றனர் அது என்ன உணவு முறை என்று கேட்கிறீர்களா…

நீங்கள் வழக்கமாக பின்பற்றப்படும் சைவ உணவு பழக்கத்தோடு பால் மற்றும் டைரி பொருட்கள் என்று அழைக்கப்படும் பன்னீர், தயிர், சீஸ் நெய் போன்ற பால் சம்பந்தப்பட்ட பொருட்களையும், விலங்குகளிடமிருந்து பெறப்படும் முட்டை, இறைச்சி போன்ற உணவுகளை தவிர்ப்பதே வீகன் உணவு முறை.

இந்த உணவு முறையை பின்பற்றினால் உடம்பிலுள்ள கொழுப்புகள் குறையும்.ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஷீலா -ரயான் தம்பதியினர் அவர்களின் 18 மாத குழந்தைக்கும் வீகன் உணவு முறையை பின்பற்றி வந்துள்ளனர்.இதனால் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தை மரணம் அடைந்துவிட்டது. மேலும் பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு மூன்று மற்றும் ஐந்து வயதுகளில் ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளுக்கும் வீகன் உணவு முறையை பின்பற்றியதால், அந்த குழந்தைகளும் பல் சொத்தையாகி உடல் மெலிந்து காணப்படுகின்றனர். அதனால் அவர்களை அரசு காப்பகத்துக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.

Exit mobile version