தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது. தமிழக அரசின் முன்னேற்பாடுகளால் மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுதினர்.
தமிழகத்தில் ஆயுதப்படை, சிறப்பு காவல்படை மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது. சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தினால் 8 ஆயிரத்து 888 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் 11 தேர்வு மையங்களில் 17 ஆயிரத்து 139 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதும் மையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.