நாட்டின் 16-வது புதிய பாதுகாப்பு தலைமை நிலையம் தொடங்கப்பட்டது

நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் பாதுகாப்பு துறை நவீன மயமாக்கப்பட்டுள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நாட்டின் 16-வது மாவட்ட பாதுகாப்பு தலைமை நிலையத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். இதனையடுத்து பேசிய ஆளுநர், தீவுப்பகுதிகளில் பாதுகாப்பை மேற்கொள்வதிலும், கடத்தல்களை தடுப்பதிலும் சுங்கத்துறைக்கு உதவியாக கடலோர காவல் படை செயல்படுவதாக கூறினார்.

கஜா புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின்போது மக்களையும், மீனவர்களையும் மீட்டதில் கடலோர காவல்படை சிறப்பாக செயல்பட்டதாக ஆளுநர் பாராட்டினார். தூத்துக்குடியில் அமைக்கப்பட்டிருக்கும் தலைமை நிலையத்தின் மூலம் ராமநாதபுரம், தஞ்சாவூர், உள்ளிட்ட கடலோர பகுதிகளில் ரோந்து பணியை வீரர்கள் விரைவாக மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version