கடலூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடந்த 2014 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் திட்டு பகுதியை சேர்ந்த ஜானி என்பவர் ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். இந்த வழக்கு கடலூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 4 பிரிவுகளின் கீழ் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு 85 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.