கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்று திரும்பிய பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயம் அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை திருவேகம்பத்தூர் அருகே கடந்த முன்று தினங்களுக்கு முன்பு கேரளா மாநிலம் கலியக்காவிளையில் இருந்து 10 குடும்பங்களை சேர்ந்த 48 பேர் தங்கள் குழந்தைகளுடன் ஒரு பேருந்தில் கோடை சுற்றுலவாக ஊட்டி, பழனி மற்றும் வேளாங்கண்ணி சென்றுவிட்டு தென்காசிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, தொண்டி – மதுரை நெடுஞ்சாலையில் திருவேகம்பத்தூர் என்ற இடத்தில் சாலையோரம் உள்ள பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 16 பேர் காயமடைந்து, திருவேகம்பத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.