மேட்டூர் நீர் மின்நிலையத்தில் 16.5 மெகாவாட் மின்னுற்பத்தி துவக்கம்

மேட்டூர் அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், அணை மின் நிலையத்தில் சராசரியாக 16.5 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை மற்றும் சுரங்க மின் நிலையங்கள் மூலம் தினசரி 460 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதால், அணை மின் நிலையங்களில் 3 இயந்திரங்கள் இயக்கப்பட்டு சராசரியாக 16.5 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. மேலும், நீர்த்தேக்க மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் அதற்கேற்றார்போல் மின் உற்பத்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version