சபரிமலையில் பெண்களுக்கு எதிராக போராட்டம் – 150 பேர் கைது

சபரிமலையில் 10 வயதிலிருந்து 50 வயது வரையிலான பெண்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. 10 வயதிலிருந்து 50 வயது வரையிலான பெண்கள் பலர் கோவிலுக்கு செல்லும் வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டனர்.

கேரளாவில் நடந்த போராட்டங்களின்போது அரசுக்கு சொந்தமான பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. இதுகுறித்து 2000 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 210 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், 150 பேரை கைது செய்த போலீசார், உடனடியாக அவர்களை ஜாமீனில் விடுவித்தனர். கைதானவர்களில் பெரும்பாலானவர்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version