14 வயது சிறுவர்களுக்கும் மன அழுத்தம்- எய்ம்ஸ் டாக்டர் அதிர்ச்சித்தகவல்

 

இந்தியாவில் 14 வயது சிறுவர்களும் கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது

உலக மனநல தினம், வருகிற 10-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, செய்தியாளர்களை சந்தித்த டெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரியின் மனோதத்துவ துறை பேராசிரியர் ராஜேஷ் சாகர், மன அழுத்தம் என்பது உலக அளவில் மிகப்பெரிய சுகாதார பிரச்சினையாக உள்ளது என்றார். இந்தியாவில், சிறுவர்களும், இளைஞர்களும் அதிக அளவில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில், மனஅழுத்த விகிதம் வேகமாக அதிகரித்து வருவதாக கூறிய அவர், இந்தியாவில், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம்பேர், 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்று கூறி அதிர்ச்சியளித்தார். இதில் 75 சதவீதம்பேர், 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். போட்டி மனப்பான்மை மன அழுத்தம் அதிகரித்திருப்பதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் ராஜேஷ் சாகர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version