சாலை விபத்துக்களில் ஆண்டுதோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டுதோறும் 13 . 5 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் சமீப ஆண்டுகளில் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. சில நாடுகளில் காணப்படும் மோசமான சாலைகள் உள்ளிட்ட காரணங்களால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு புள்ளி விவரப்படி சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 13 புள்ளி 5 லட்சமாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அதன்படி, 24 விநாடிகளுக்கு ஒருவர் சாலை விபத்துக்களில் சிக்குவது தெரிய வந்துள்ளது.

2013-ம் ஆண்டு சாலை விபத்துக்களின் மூலம் 12 புள்ளி 5 லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதை ஒப்பிடுகையில் 5 ஆண்டுகளில் 1 லட்சம் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது.

5 முதல் 29 வயது வரையிலான இளம் வயதினர் சாலை விபத்துக்களால் அதிகமாக உயிரிழப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. இந்த உயிரிழப்புகள் வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்றும் ஐநா அறிக்கை எச்சரித்துள்ளது.

 

Exit mobile version