பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாதது குறித்து அரசு, தனி ஆணையம் அமைக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்..!

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாதது குறித்து அரசு, தனி ஆணையம் அமைத்து அதன் முடிவுகளை சட்டமன்றத்தில் வெளியிட வேண்டும் என முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி உள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழித்தாள் தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்காதது அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்தார். மேலும், தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் நிலை குறித்து அறிய அரசு, தனியாக ஆணையம் ஒன்றை அமைத்து, அதன் முடிவுகளை சட்டமன்றத்தில் வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.

Exit mobile version