நிக்கோபார் தீவு கடல் பகுதியில் படகு மூலம் கடத்தப்பட்ட சுமார் ஆயிரத்து 160 கிலோ போதைப் பொருளை கடலோர காவல் படையினர் கைப்பற்றி, 6 பேரை கைது செய்தனர். இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ராஜ்வீர் என்ற கப்பல் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர், சந்தேகத்திற்குரிய வகையில் சென்று கொண்டிருந்த படகை வான்நோக்கி சுட்டு மடக்கிப் பிடித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் மதிப்பு ஆயிரத்து 200 கோடி ரூபாயாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தல் சம்பவம் தொடர்பாக கொல்கத்தா போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.