திருவள்ளுவர் தினத்தையொட்டி சட்டவிரோதமாக மது விற்பனை – 11 பேர் கைது

திருவள்ளுவர் தினத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 11 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்தநிலையில் தடப்பெருப்பாக்கத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக பொன்னேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், சிரஞ்சிவி என்பவரிடமிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டிகளை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சோழவரம், கும்மிடிபூண்டி, மீஞ்சூர் ஆகிய இடங்களில் மது விற்பனை செய்த 10 பேரிடமிருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version