10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மையங்கள் 3 மடங்காக அதிகரிப்பு!

தமிழகத்தில் 10 வகுப்பு பொதுத் தேர்வுக்கான மையங்கள் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கொரோனோ நிவாரண நிதியாக தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், அதன் நிர்வாகிகள், 1 கோடி ரூபாய்க்கான காசோலையை, அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு, சிவசுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சியில் சாலைகளை தூய்மை படுத்தும் வாகனத்தின் பயன்பாட்டையும் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் அச்சமின்றி அந்தந்த பகுதிகளிலேயே தேர்வு எழுதலாம் எனக்கூறினார்.

Exit mobile version