சிவகாமி அம்பாள் கோவிலில் 103 சவரன் நகை மாயம் -ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையில் விசாரணை

நெல்லை மாவட்டம் பணக்குடி ராமலிங்க சுவாமி, சிவகாமி அம்பாள் கோயிலில் 103 சவரன் நகை காணாமல் போனது குறித்து ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பணக்குடி ராமலிங்க சுவாமி, சிவகாமி அம்பாள் திருக்கோவிலின் திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். திருவிழாவின் போது அம்பாளுக்கும், சுவாமிக்கும் தங்க நகைகள் அணிவித்து வீதி உலா வருவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக சுவாமிக்கு தங்க நகைகள் அணிவிக்கப்படாமல் கவரிங் ஆபரணங்கள் அணிவிக்கப்படுகின்றன.

இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதில் இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிலைத்தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் பழவூர் நாறும்பூநாதர் கோவிலுக்கு வருகை தந்த போது அவரிடம் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் தனிப்பிரிவு போலீசார் கோவிலில் திருடப்பட்ட நகைகள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version