இந்திய ரிசர்வ் வங்கியானது பத்து ரூபாய் நாணயத்தினை 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதனை ஒட்டி பல சர்ச்சைகள் தொடர்ந்து மக்களிடையே எழுந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக நாட்டில் பல பகுதிகளில் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்று மக்களால் நம்பப்படுகிறது. பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்பது முற்றிலும் போலியான வதந்தி என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பத்து ரூபாய் நாணயம் செல்லும் என்று தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கி கூறிவரும் நிலையில் தற்போது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சில நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆயத்தமாகி உள்ளது. முதற்கட்டமாக மாவட்ட அளவிலான நாணய மேலாண்மை குழு கூடி போக்குவரத்துக் கழகத்தினரும், பலசரக்கு கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க வைப்பதற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுமாறு பணிக்கப்பட்டுள்ளனர். மேலும் வங்கி, போக்குவரத்துத் துறையில் அதிக அளவு பத்து ரூபாய் நாணயம் புழக்கத்தில் இருந்தால் மக்களிடையே வதந்திகள் நீங்கி அவர்கள் விழிப்புணர்வு அடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.