பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சிறுவர்கள் குறும்புத்தனமாக ஹீலியம் பலூன்களை தீவைத்துக் கொளுத்த அச்சம்பவம் விபரீதத்தில் முடிந்தது.
மணிலாவில் பலூன் வியாபாரி ஒருவர் ஹீலியம் நிரப்பட்ட பலூன்களைக் போர்த்தி கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிறுவர்கள் ஒரு பலூனில் தீ வைக்க ஹீலியத்தின் தன்மை காரணமாக அனைத்து பலூன்களும் கொளுந்து விட்டு எரிந்தன. பலூன்கள் வேகமாக எரியத் துவங்கியதும் சிறுவர்கள் அவ்விடத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக சிறு தீக்காயங்களுடன் பலூன் வியாபாரி உயிர் பிழைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது