வேலூர் அருகே 4 வயது சிறுமியை கரடி தாக்கியது

 

வேலூர் அருகே கரடி தாக்கியதில் 4 வயது சிறுமி படுகாயம் அடைந்துள்ளார்.

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ளது கெத்தூர் .இவ்வூர் ஆந்திரா மற்றும் தமிழக எல்லையை ஒட்டிய வனப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒரு கரடி ஊருக்குள் அங்கும் இங்கும் ஓடியது. கரடி ஊருக்குள் உலவியதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து அதனை துரத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். கரடியை விரட்டிய போது , தெருவில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமியை கரடி தாக்கியது. இதனையடுத்து பொதுமக்கள் கரடியுடன் போராடி குழந்தையை மீட்டனர். கரடி தாக்கி படுகாயமடைந்த 4 வயது சிறுமி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே பொதுமக்கள் விரட்டியதால் அங்கிருந்து தப்பி ஓடிய கரடி ஒரு வீட்டிற்குள் தஞ்சம் அடைந்தது. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் உதவியுடன், வனத்துறையினர் கரடியை பிடித்தனர். பின்னர் பாதுகாப்புடன் அந்த கரடி வனப்பகுதியில் விடப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Exit mobile version