அரசுமுறை பயணமாக ருமேனியா சென்றுள்ள குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு அந்நாட்டு துணை பிரதமர் அனா பிர்ச்சல் இந்திய பாரம்பரிய முறைப்படி சேலை அணிந்து வரவேற்றார்.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செர்பியா, ருமேனியா மற்றும் மால்டா நாடுகளுக்கு ஒரு வாரம் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதல் நாடாக செர்பியா சென்ற அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் வூசிக்கை சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து வெங்கையா நாயுடு ஆலோசித்தார்.
இந்தநிலையில் இரண்டாவதாக மால்டா சென்ற வெங்கையா நாயுடு, அந்நாட்டு அதிபர் மரியே லூயிசே கொலீரோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
தமது பயணத்தின் மூன்றாவது நாடாக ருமேனியாவுக்கு வெங்கையா நாயுடு சென்றார். அங்கு அந்நாட்டு துணை பிரதமர் அனா பிர்ச்சல் இந்திய பாரம்பரிய முறைப்படி சேலை அணிந்து வரவேற்றது அனைவரையும் கவர்ந்தது.