விமான பயணத்திற்கு காகித ஆவணங்களைச் சரிபார்த்து அனுமதிக்கும் முறைக்குப் பதிலாக, டிஜிட்டல் முறை அறிமுகமாகிறது.
டிஜிட்டல் இந்தியாவின் ஒரு அங்கமாக, அனைத்து விமான நிலையங்களும் டிஜிட்டல் முறைக்கு மாறுகிறது. அதன்படி, விமான பயணத்திற்கு காகித ஆவணங்களைச் சரிபார்த்து அனுமதிக்கும் முறைக்குப் பதிலாக, டிஜிட்டல் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த டிஜிட்டல் முறையானது, வரும் பிப்ரவரி மாதத்திற்குள் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு விமான நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அதேபோல் ஏப்ரல் மாதத்திற்குள் வாரணாசி, கொல்கத்தா, புனே, விஜயவாடா ஆகிய விமான நிலையங்களிலும் அறிமுகமாக உள்ளன. இதனையடுத்து, 2 ஆம் கட்டமாக சென்னை விமான நிலையத்திலும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
மேலும், விமான நிலையங்களில் பயோமெட்ரிக் முறையும், முகத்தை ஸ்கேன் செய்து அடையாளம் காணும் face recognition முறையும் ஏற்படுத்தப்பட உள்ளன. அதேபோல், நுழைவு வாயிலில் இருந்து, விமானத்தில் ஏறுவதற்காகச் செல்லும் போர்டிங் கேட் வரை இ-கேட் எனப்படும் டிஜிட்டல் முறையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.