விஜயகாந்திற்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று இல்லம் திரும்பி இருக்கும் விஜயகாந்த், முழு உடல்நலன் பெற வேண்டுமென்று தமது டுவிட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னெப்போதும் போல், பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், அவர் இன்று வீடு திரும்பி உள்ளார். தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version