பாலியல் தொழிலுக்காக பெண் குழந்தைகள் கடத்தப்படுவதை கதையின் கருவாகக் கொண்டுள்ள ”லவ் சோனியா ” திரைப்படம் அடுத்த மாதம் ஐ.நா -வில் திரையிடப்படுகிறது.
இதுகுறித்து பேசிய படத்தின் இயக்குனர் தப்ரேஸ் நூரானி, வாங்கிய கடனை அடைப்பதற்காக, தந்தையால் விற்கப்பட்ட இந்திய கிராமத்து இளம் பெண், பாலியல் தொழிலில் தள்ளப்பட்டதை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது என்றார். இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 11-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள, ஐ.நா., அலுவலகத்தில் லவ் சோனியா திரையிடப்படுகிறது என்று நூரானி கூறியுள்ளார்.