ராஜஸ்தானில் முதல்வர் படம் மீது சிறுநீர் கழித்த அமைச்சர்

ராஜஸ்தான் மாநில முதல்வரான வசுந்தரா ராஜே சிந்தியா படம் மீது அந்த மாநில அமைச்சர் ஒருவர் திறந்தவெளியில் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக வசுந்தரா ராஜே சிந்தியா உள்ளார். இவரது அமைச்சரவையில் ஷம்பு சிங் கேதாசர் என்பவர் இடம்பெற்றிருக்கிறார். இவர் ராஜஸ்தான் மாநில விதைகள் கழகத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

நேற்று அஜ்மீரில் பாஜக பேரணி ஒன்று நடந்தது. பேரணி நடந்த பகுதிக்கு பின்புறம் சென்ற அமைச்சர் ஷம்பு சிங் கேதாசர், அங்கு கிடந்த முதல்வர் வசுந்தரா ராஜேவின் பதாகை மீது சிறுநீர் கழித்துள்ளார். இதைச் சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் வைரலானது.

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 27 மாவட்டங்களில் திறந்த வெளிக்கழிப்பிடம் ஒழிக்கப்பட்ட பகுதியாக ஸ்வச் பாரத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் ஒருவரே இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version