ரபேல் விவகாரம் – விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு மறுப்பு!

 

இந்தநிலையில் மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதும், விதிகளில் சில திருத்தங்கள் செய்து பிரான்சின் எச்.ஏ.எல். நிறுவனத்தை புறக்கணித்து, அனுபவம் இல்லாத தனியார் நிறுவனத்திடம் இருந்து ஒப்பந்தம் கோரப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு பாஜக அரசு ஒப்பந்தம் செய்ததாக காங்கிரஸ் புகார் கூறி வருகிறது. இதனை பாஜக மறுத்து வருகிறது.

இந்தநிலையில் ரபேல் போர் விமான விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி, நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு மத்திய பொது தணிக்கைத்துறையிடம் காங்கிரஸ் மனு அளித்தது.

இந்தநிலையில், ரபேல் விமான விவகாரம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ரபேல் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் தவறான தகவல்களை தெரிவித்து வருவதாக குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கோ அல்லது மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் விசாரணைக்கோ உத்தரவிட முடியாது என்றார்.

பாதுகாப்புத் துறை அமைச்சராக ஏ.கே.அந்தோணி 8 ஆண்டுகளாக இருந்த காலகட்டத்தில், பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்கவோ அல்லது சக்திமிக்கதாக மாற்றவோ எந்த பணியையும் செய்யவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

Exit mobile version