யானைகள் நலவாழ்வு முகாமினை ஆர்வமுடன் பார்வையிட்ட ரஷ்யா நாட்டு கலைஞர்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் நடந்து வரும் யானைகள் நலவாழ்வு முகாமினை ரஷ்யா நாட்டு கலைஞர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நல்வாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 15 ஆம் தேதி துவங்கிய இந்த முகாமில் 28 யானைகள் பங்கேற்றுள்ளன. இந்த நிலையில் இந்திய – ரஷ்யா கலாச்சார நட்புறவு கழகம் சார்பில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ரஷ்ய கலைஞர்கள் குழுவினர் யானைகள் நலவாழ்வு முகாமிற்கு வருகை தந்தனர்.

அப்போது, முகாமிற்கு வந்த ரஷ்ய கலைஞர்களை முகாம் நிர்வாகிகள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். மிகவும் குளிர்பிரதேசமான ரஷ்யாவில் யானைகள் இல்லை என்பதால், யானைகளின் நடவடிக்கைகளை முகாமில்  ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். மேலும், ரஷ்ய கலைஞர்கள் யானையின் அருகே நின்று புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

Exit mobile version