தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களை மாற்ற நினைக்கும் அலைபேசி வாடிக்கையாளர்களின் கோரிக்கை மீது தேவையற்ற காலதாமதம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தொலைத்தொடர்பு ஆணையகம் தெரிவித்துள்ளது.
அலைபேசி எண்களை மாற்றிக்கொள்வதற்கான வரைவு திட்டத்தை ட்ராய் எனப்படும் தொலைத்தொடர்பு ஆணையகம் வெளியிட்டுள்ளது.
இதில் ஒரே வட்டத்திற்குள் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு அலைபேசி சேவையை மாற்றுவதற்கு இரண்டு நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளருக்கு 7 நாட்களுக்குள் இதன் பலன் சென்று சேர வேண்டும் என்றும் வரையறை செய்யப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் கேட்டும் சேவை நிறுவனங்கள் மாற்றுவதில் தேவையற்ற காலதாமதம் ஏற்பட்டால் 10 ஆயிரம் ரூபாய் அபாரதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.