கர்நாடகாவில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு சரிந்ததையடுத்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையளவு குறைந்ததையொட்டி, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. அணைக்கு வரும் நீர் வரத்து 40 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.
அணையின் நீர்மட்டம் 119 புள்ளி 2 ஐந்து கனஅடியாகவும், நீர் இருப்பு 92 புள்ளி 2 எட்டு டி.எம்.சி.யாகவும் உள்ளது. ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 80 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. இருப்பினும், அருவிகளில் குளிக்க 44வது நாளாகவும், பரிசல் இயக்க 12வது நாளாகவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.