மூச்சிரைக்க, மூன்றரை கிலோ மீட்டர் ஓடி பந்து வீசிய பவுலர்.

 

மூன்றரை கிலோ மீட்டர் தூரம், ஓடி வந்து பந்து வீசிய சிறுவன், கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
கிரிக்கெட் ஆடுகளத்தில் நீண்டதூரம் ஓடி பந்துவீசுபவர் என்றால் சட்டென்று சோயிப் அக்தர் தான் ஞாபகம் வரும்.

ஆனால் இங்கிலாந்த சேர்ந்த சிறுவன் ஒரு வினோத சாதனையை செய்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் மெளரிஸ் கிரிஃபின். இவர் பந்துவீசும் முன்பு 3புள்ளி 767 கிலோ மீட்டர் தூரம் மூச்சிரைக்க ஓடிவந்து பந்து வீசியுள்ளான். 26 நிமிடம் 55 நொடிகள் எடுத்துக்கொண்டு பிறகே அவர் ஆடுகளத்தில் நுழைந்துள்ளார். இவர் ஓடிவரும் வரை பேட்ஸ்மேன்கள், ஃபீல்டர்கள், நடுவர்கள் என அனைவரும் காத்திருந்து இந்தச் சாதனைக்கு உதவியுள்ளார்கள். அடேல் கிரிக்கெட் கிளப்பில்
யு-11 மற்றூம் லீட்ஸ் மோடர்னியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது

அந்தச் சிறுவன், இங்கிலாந்தின் யார்க் ஷையர் வீதி வழியே ஓடி வந்த போது , கூடவே அவருடைய தந்தையும் ஓடிவந்து ஊக்கப்படுத்தியுள்ளார். இதற்கு முன்பு 0புள்ளி851 கிலோ மீட்டர் ஓடிவந்து பந்துவீசியதே சாதனையாக இருந்தது. அதை இந்தச் சிறுவன் முறியடித்துள்ளார்.

இதையடுத்து மெளரிஸின் பெயர் கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ளது

Exit mobile version