பேக்மேன் ஸ்மாஷ் என்ற விளையாட்டில் நயன்தாராவிடம் , தோற்றுப்போனதாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை, நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பில் காதல் வயப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் வெளிநாடுகளிலும் ஜோடியாக சுற்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் காதல் பற்றி இதுவரை அவர்கள் வாய் திறக்கவில்லை. மற்றவர்கள் பேசுவதையும் கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் ஜோடியாக சுற்றும் படங்களை மட்டும் தவறாமல் வெளியிட்டு அதிர்வை உருவாக்கி வருகிறார்கள்.
விநாயகர் சதுர்த்தியன்று இருவரும் சேர்ந்து எடுத்த படத்தை வெளியிட்டனர். அதை பார்த்த ரசிகர்கள் படம் நன்றாக இருக்கிறது. விரைவில் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கருத்து பதிவிட்டார்கள்.
சமீபத்தில் இருவரும் ஜோடியாக அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று வழிபட்ட படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில், இருவரும் பேக்மேன் ஸ்மாஷ் என்ற விளையாட்டை விளையாடியுள்ளனர். அந்த வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 1050 புள்ளிகளை நயன்தாரா பெற்றுள்ளார். 700 புள்ளிகளை பெற்ற விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் தோல்வி அடைந்துள்ளார். விளையாட்டு வினையாகாமல் இருந்தால் சரிதான்…