சுனாமியால் மாயமான 5 ஆயிரம் பேரை தேடும் பணியை நிறுத்த இந்தோனேசிய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்து 763 ஆக உயர்ந்துள்ளது.
செப்டம்பர் 28ம் தேதி சுனாமி தாக்கியதில் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் இடிந்து தரைமட்டமானது.
10 நாட்களைக் கடந்தும் 5 ஆயிரம் பேர் மாயமாகியுள்ளனர். மீட்புப் பணிகளில் பேரிடர் மீட்புக்குழு, ராணுவத்தினர் என பலர் ஈடுபட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தால் மலையடிவாரங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதில் சகதிக்குள் சிக்கி கிடக்கும் உடல்களை மீட்பதில் சிரமங்கள் உள்ளதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வரும் 11ம் தேதியுடன் தேடுதல் பணியை நிறுத்த இந்தோனேசிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாயமான 5 ஆயிரம் பேரின் நிலை என்ன என்பது குறித்து தெரியாமல் அவர்களின் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.