மழைக்கால தவளை போல சத்தமிடுவதா? ஆர்.எஸ்.எஸ் க்கு காங்கிரஸ் கேள்வி

 

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மழைக்கால தவளை போல சத்தமிடுவதாக காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

அயோத்தியில் விரைவில் ராமர்கோவில் கட்டப்படுமென ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியிருந்தார்.இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சி ஆர்.எஸ்.எஸ் தலைவரை இவ்வாறு விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக ,காங்கிரஸ் தலைமைச் செய்தியாளர் ரன்தீப் சுர்ஜேவாலா விடுத்துள்ள அறிக்கையில்
அவர்களுக்கு தேர்தல் வரும் போதெல்லாம் ராமர் கடவுள் நினைவுக்கு வந்து விடுகிறார் என கூறியுள்ளார். தேர்தல் முடிந்ததும் ராமர் நாடு கடத்தப்பட்டுவிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

இது மழையும் தேர்தலும் கலந்த ஒரு காலம் ஆகும். எண்ணற்ற தவளைகள் சத்தம் போடுகின்றன. ஆனால் அத்தகைய சத்தங்கள் எதுவும் உண்மையாக இருக்கபோவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
ராம ஜென்மபூமி-பாபர் மசூதி விவகார வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று காங்கிரஸ் நம்புகிறது. எவ்விதமான தீர்ப்பு யார் பக்கம் வந்தாலும் அதன்படி நடக்க வேண்டும், அரசாங்கம் அதை செயல்படுத்த வேண்டும் என ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

Exit mobile version