மருந்து கடைகள் அடைப்பு- 35 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு

 

தமிழகம் முழுவதும் மருந்து வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தியதால் 35 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஆன்லைன் மருந்து விற்பனையை கண்டித்து மருந்து கடைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன.
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ‘ஆன்-லைன்’ மருந்து விற்பனையை எதிர்த்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியளர்களிடம் பேசிய சங்க பொது செயலாளர் கே.கே.செல்வன்
அமெரிக்காவில் ‘ஆன்-லைன்’ மருந்து விற்பனை தொடங்கிய சில நாட்களில் 500-க்கும் மேற்பட்ட போலி மருந்து கம்பெனிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் அமெரிக்காவிலேயே போலி நிறுவனங்கள் செயல்படும் போது, இந்தியாவில் பல போலி நிறுவனங்கள் உருவாக இது வழி வகுக்கும் என்றார்.

இந்த கடையடைப்பு போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டதாகவும் 35 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு தனது முடிவை மாற்றம் செய்யவில்லை என்றால் வரும் டிசம்பர் மாதம் 3 நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செல்வன் கூறியுள்ளார்.

Exit mobile version