மருந்து கடைகள் அடைப்பு – பொது மக்கள் தவிப்பு! 

ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மருந்து கடை வணிகர்கள் அடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் பற்றி தெரியாமல் முன்கூட்டியே மருந்துகள் வாங்காமல் இருந்த மக்கள் இன்று கடைகளுக்குச் சென்று பார்த்தபோது, கடைகள் மூடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மருத்துவமனைகளுக்குள் இருக்கும் கடைகள் திறக்கப்பட்டிருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அத்தியாவசிய மருந்துகள் தேவைப்படுவோர், பெரிய மருத்துவமனைகளுக்குள் இருக்கும் மருந்துக்கடைகளுக்குச் சென்று வாங்கிக் கொள்ளலாம்.

ஆன்லைன் வர்த்தகம் குறித்து அண்மையில்  பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆன்லைன் வர்த்தகத்தை தமிழக அரசும் ஆதரிக்கவில்லை என கூறியிருந்தார். 

இதனையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 25 மருந்துக் கடைகள் இன்று அடைக்கப்பட்டன. 

இதேபோல், தருமபுாி நகா் மற்றும் பாலக்கோடு, பென்னாகரம், காாிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூா், நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில்  500க்கும் மேற்பட்ட மருந்துகடைகள் அடைக்கப்பட்டன. 

 ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பவானிசாகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆன்லைன் மருந்து வா்த்தகத்தை தடைசெய்யக்கோாி 500க்கும் மேற்பட்ட மருந்து கடைகளை அடைக்கப்பட்டன. 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

 

Exit mobile version