எத்தகைய மோசமான சூழ்நிலையையும் எதிர்த்து வாழக்கூடிய திறன் கொண்டவை கரப்பான் பூச்சிகள். இவற்றை பயன்படுத்தி, விலை மதிப்புள்ள மனித உயிர்களை காப்பாற்ற முடியும் என்பதை நிருபித்துள்ளார் இந்திய விஞ்ஞானி ஒருவர். கரப்பான் பூச்சியில் சிறிய வகை சிப்பை பொருத்துவதன் மூலம் அதன் செயல்பாட்டினை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார். இந்த வகை கரப்பான் பூச்சி, சைப்ராக் கரப்பான் பூச்சி என்று அழைக்கப்படும். ஜிபிஎஸ், சிறிய வகை கேமிரா மற்றும் சிக்னல் மூலம் இடிந்த கட்டிடங்களுக்குள் கரப்பான் பூச்சிகள் அனுப்பி வைத்து, இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க முடியும். சோதனை முறையில் உள்ள இந்த கண்டுபிடிப்பு விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.