வதந்திகள் பரவுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசின் சார்பில் இருமுறை வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்தநிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை, வாட்ஸ் அப் நிறுவன தலைமை செயல் அதிகாரி கிரிஸ்டேனியல் சந்தித்து பேசினார். அப்போது வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரவுவதை தடுக்கும் வகையில் தொழில் நுட்ப ரீதியில் ஆரம்ப புள்ளியை கண்டறிய வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை வாட்ஸ் அப் நிறுவனம் நிராகரித்துள்ளது. தகவல் பரிமாற்றத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்தால், இது வாட்ஸ் ஆப்பின் அடிப்படை கட்டமைப்பான பயன்பாட்டாளர்களின் தனி உரிமையை பாதிக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.