தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ,சென்னையில் பெரியார் சிலையை ஜெகதீசன் என்பவர் அவமதித்ததாக செய்தி பார்த்தேன். அவர் எந்த இயக்கத்தை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இவர்கள் யார்?, யார் இவர்களை தூண்டி விடுகின்றனர் என இதனுடைய பின்னணியை பார்க்க வேண்டும். ஆனால் பெரியார் சிலையை அவமதிப்பது ஏற்புடைய விஷயம் அல்ல என்று தெரிவித்தார்.
இன்றைக்கு பெரியாரின் சிந்தனைக்கு எதிராக ஏராளமான இயக்கங்கள் வந்துவிட்டன. இதை யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் பல்வேறு கட்சிகள் அரசியல் நடத்துகின்றன. இதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. எது நியாயமோ அது நடக்க வேண்டும். ஆளுநர் என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.