பூக்கள் விலை கிடுகிடு உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

விநாயகர் சதூர்த்தி தினத்தை முன்னிட்டு ஓசூரில் பயிரிடப்பட்டுள்ள சாமந்தி. ஜெர்பெரா.பட்டன் ரோஸ் ஆகிய பூக்கள் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர். தளி. உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சாமந்தி. பட்டன் ரோஸ். ஜெரபெரா. பேன்ற மலர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்கள் உள்ளூர் தேவைகள் போக கர்நாடகாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சில வாரங்களாக பூக்கள் விலை வீழ்ச்சியை சந்தித்து வந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி மற்றும் திருமண முகூர்த்த நாட்களையொட்டி பூக்கள் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது.

இந்துக்களின் பண்டிகைகள் மற்றும் வழிபாடுகளில் மலர்களுக்கு என்றுமே முதலிடம் என்பதால், பூக்கள் விலை அதிகரித்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் 10 ரூபாய்க்கு விற்பனையான சாமந்தி தற்போது கொள்முதல் விலையாக 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பட்டன் ரோஸ், ஜெர்பெரா மலர்களின் விலையும் அதிகரித்து இருப்பதால், விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version