புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து புழல் சிறையில் 5 முறை சிறைத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் இருந்து தொலைக்காட்சி பெட்டிகள், எப்.எம் ரேடியோக்கள், போன்றவை கைப்பற்றப்பட்டன.
அந்த பொருட்களை கைதிகளுக்கு கொடுத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை புழல் சிறை அதிகாரிகளுடன் ஏ.டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா ஆலோசனை நடத்தினார்.
அப்போது சிறைக்குள் கூடுதலாக கண்காமிப்பு கேமராக்கள், ஜாமர் கருவிகள் பொருத்துமாறு அதிகாரிகளுக்கு ஏடிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.