புதையலை கதவிற்கு முட்டுக்கொடுத்து வைத்திருந்த முட்டாள் அமெரிக்கர்!

30 ஆண்டுகளாக 7 கோடி ரூபாய் மதிப்பு உள்ள  விண்கல்லை வீட்டின் கதவிற்கு முட்டுக்கொடுக்க பயன்படுத்திய நிகழ்வு அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. 

மிச்சிகன் மாகாணத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளரான மோனா சிர்பெஸ்குவிடம், அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தன் வீட்டின் கதவு அசையாமல் இருப்பதற்காக முட்டுக்கொடுக்கப் பயன்படுத்தி வந்த ஒரு கல்லை கொடுத்து அதன் தன்மைகள் குறித்து சோதனை செய்யக் கூறியுள்ளார்.

10 கிலோ எடைக்கொண்ட புதையல் போன்ற அந்த அதிசய கல்லை ஆய்வு செய்ததில் ஆராய்ச்சியாளருக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. 30 வருடங்களாக வீட்டின் கதவிற்கு முட்டுக் கொடுக்கப்பட்டிருந்தது விண்கல் என்பது சோதனையில் தெரியவந்துள்ளது.

சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு மெக்சிகனில் உள்ள எட்மோட் என்ற பகுதியில் விளைநிலத்தில் விழுந்த இந்தக் கல்லின் இன்றைய மதிப்பு 7 கோடியே 37 லட்சம் ரூபாய் என ஆராய்ச்சியாளர் தெரிவித்தார்.

அந்த அதிசய கல்லை வாஷிங்டனில் உள்ள புகழ்பெற்ற ஸ்மித் சோனியன் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விண் கல்லில் 88 சதவிகிதம் இரும்பும், 12 சதவிகிதம் நிக்கலும் இருப்பதாகவும், இதுவரை பூமியில் விழுந்த விண்கற்களில் இதுவே பெரியது என்பதும் தெரிய வந்துள்ளது.

Exit mobile version