பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை சிபிஎஸ்இ அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்த சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறுவதை எளிமையாக்கும் விதமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எழுத்துத்தேர்வு மற்றும் செயல்முறைதேர்வு இரண்டிலும் சேர்த்து மொத்தமாக 33% மதிப்பெண் பெற்றால் போதும் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், இந்தாண்டு ஆண்டு முதல் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.