பிரதமர் படத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

அரசின் மானிய உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளில் பதிக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் படத்தை அகற்ற வேண்டும் என மத்தியப்பிரதேச மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், வீடு இல்லாத ஏழை மக்களுக்கு மத்திய அரசின் மானிய உதவியுடன் வீடு கட்டிக்கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், மத்தியப்பிரதேச மாநிலத்தில் கட்டப்பட்ட வீடுகளில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானின் படங்கள் உள்ள டைல்ஸ் ஒட்டப்பட்டது.

இதை அகற்ற வேண்டும் என, பத்திரிகையாளர் ஒருவர் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் சவுராஜ் சிங் சவுகான் படங்களுடன் கூடிய டைல்ஸ்களை அகற்றுமாறு உத்தரவிட்டது.

Exit mobile version