பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் ஆண்டு மேலும் ஒரு அற்புதமான ஆண்டாக இருக்க வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களுக்கு மேலும் பல்லாண்டுகள் சேவை செய்வதற்கு நல்ல ஆரோக்கியமும் ஊக்கமும் கிடைக்க இறைவனை பிரார்த்திப்பதாக தனது வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.