கல்வி கற்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு அரசுப்பணி தான் கனவாக இருக்கிறது. கால் காசு என்றாலும் அரசு ஊதியமாக இருக்க வேண்டும் என அவர்களை ஊக்குவிக்கும் பெற்றோர்கள் அதிகம். இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் 5ம் வகுப்பு தகுதி போதுமான பியூன் பணிக்கு, முனைவர் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்பாடுத்தியுள்ளது. காவல்துறை தொலைத்தொடர்பு துறையில், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தகவல் பரிமாற்றம் செய்வதற்கான தூதுவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதன்படி, 62 பணியிடங்களுக்கு முனைவர் பட்டம் பெற்ற 3 ஆயிரத்து 700 பேரும், 50 ஆயிரம் பட்டதாரிகளும் விண்ணப்பித்துள்ளனர். 20 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கும் என்பதால், இந்தப் போட்டி ஏற்பட்டுள்ளது. அதிக கல்வித் தகுதி கொண்டவர்கள் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளதால் தேர்வு ரத்தாக வாய்ப்புள்ளது