அமெரிக்க நீதிபதி பிரெட் கவனோவுக்கு எதிராக பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது.1982 ஆம் ஆண்டு பிரெட் கவனோ தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக பேராசியர் கிரிஸ்டின் கூறி உள்ளார். அப்போது பிரெட்டுக்கு 17 வயது.கிறிஸ்டி அப்போது 15 வயது சிறுமியாக இருந்தார்.
பேராசியர் கிரிஸ்டின் உள்பட மேலும் பல பெண்கள் பிரெட் கவனோ மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர். அவர்களை எஃப்.பி.ஐ விசாரிக்க திட்டமிட்டுள்ளது.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை பிரெட் மறுத்துள்ளார்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் , இது வரை ‘குற்றம் நிரூபிக்கப்படும்வரை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் நிரபராதி என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இப்போது நிரபராதி என நிரூபிக்கும்வரை குற்றவாளியாக கருதும் போக்கு நிலவுவதாக குறிப்பிட்டார். இது வித்தியாசமான மிக மோசமான நிலைப்பாடு என்று கூறிய அவர்,இது அமெரிக்க இளம் ஆண்களுக்கு மிக மோசமான கால கட்டம் என வர்ணித்தார். செய்யாத தவறுக்கு பழி சுமக்கும் காலகட்டம் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.