பாலியல் வழக்கு – பேராயருக்கு சம்மன் ! 

 

கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக பேராயர் பிராங்கோ முலக்கல்லுக்கு விசாரணை குழு சம்மன் அனுப்பி உள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பலாத்கார புகார் கொடுத்துள்ளார்.

அவரது சக கன்னியாஸ்திரிகள் 5 பேர் உள்பட ஏராளமானோர், கொச்சியில் கடந்த 5 நாட்களாக நியாயம் கேட்டு போராட்டம் நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, டெல்லியில் உள்ள வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ராவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

ஆனால் பிஷப் பிராங்கோ தன் மீதான புகாரை மறுத்து உள்ளார். இந்த நிலையில் பிஷப்புக்கு எதிராக வலுவான சான்றுகள் கிடைத்துள்ளதாக விசாரணைக் குழு உறுதிப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பிஷப் பிராங்கோவுக்கு சம்மன் அனுப்பபட்டு உள்ளது. 

Exit mobile version