இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி கூறியதாவது, “சண்முகநதி ஆற்றங்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த நாணயமானது செம்பினால் செய்யப்பட்டுள்ளது. நாணயத்தின் பின்புறம் கொங்கு சேர அரசின் முத்திரையான வில்லும், அதற்கு அடுத்து யானையும் தொடர்ந்து, பனைமரமும் பொறிக்கப்பட்டுள்ளது.
இவை மூன்றுமே பண்டைய சேர அரசின் துறைகள். சேர மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் யானை உருவம் குறிக்கப்படுவதில்லை. அதனால், யானை உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் கிடைத்திருப்பது மிகவும் அரிதான ஒரு விஷயம்.
3 புள்ளி 2 கிராம் எடையில் ஒரு சென்டி மீட்டர் குறுக்களவு அமைந்துள்ள இந்த நாணயம் கி.பி 1299 முதல் 1320 வரையில் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ரவி வர்மா குலசேகர பெருமாள் என்ற மன்னரின் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்டிருக்கலாம்” எனவும் ஆய்வாளர் நாராயண மூர்த்தி தெரிவித்தார்.