திண்டுக்கல் மாவட்டம் பழனி இடும்பன் கோவில் அருகில் குதிரை வண்டிகள் செய்யும் இடத்தில் பாம்பு ஒன்று இருப்பதாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் வண்டிச் சக்கரத்தின் அடியில் இருந்த மலைப்பாம்பினை பிடித்தனர். இதையடுத்து, அந்தப் பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது. தொடர் மழை காரணமாக குளிர்ச்சி தாங்க முடியாமல் பாம்பு உள்ளிட்டவை வெளியில் வருவதாக கூறப்படுகிறது.
பழநி அருகே 7 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு
-
By Web Team

- Categories: செய்திகள், தமிழ்நாடு
- Tags: பழநிமலைப்பாம்பு
Related Content
மணப்பாறை அருகே 10அடி நீள மலைப்பாம்பு ஒன்று சிக்கியது
By
Web Team
July 24, 2019