கேரளாவில் பெய்த கனமழையால் பம்பா நதியிலும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோரம் உள்ள கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. சபரிமலையில் பம்பா நதியை ஐயப்ப பக்தர்கள் கடப்பதற்காக கட்டப்பட்டிருந்த இரண்டு பாலங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பக்தர்கள் தங்கி ஓய்வு எடுக்கும் ராமமூர்த்தி மண்டபம், 200 மீட்டர் நீளமுள்ள பிரதான நடைபந்தல், அன்னதான மண்டபம், கழிவறைகள் உட்பட அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்தநிலையில், வெள்ள பாதிப்புகளை திருவாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். வெள்ளப் பெருக்கால் 300 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டு உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். மண்டல பூஜைக்கு முன்னதாக பாதிப்புகள் சீர் செய்யப்படும் என்று உறுதியளித்த அதிகாரிகள், பம்பை நதியின் குறுக்கே புதிய பாலம் கட்டப்படும் என்றும் கூறினர்.
பம்பை நதி குறுக்கே விரைவில் புதிய பாலம்
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: கேரளா வெள்ளம்பம்பை நதிபுதிய பாலம் கட்டப்படும்
Related Content
ராமேஸ்வரத்தில் மேலும் ஒரு புதிய பாலம்
By
Web Team
September 10, 2018
வெள்ள நிவாரண நிதியாக ரூ. 539 கோடி சேர்ந்துள்ளது
By
Web Team
August 25, 2018