பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து, புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நிலையில், புதிய ரூபாய் நோட்டுகளில் உள்ள அழுக்குகளால், பலவிதமான தொற்றுநோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், புதிய ரூபாய் நோட்டிலிருந்து பரவும் நோய்களில் இருந்து, பொது மக்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோருக்கு, அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு கடிதம் அனுப்பி உள்ளது. புதிய ரூபாய் நோட்டுகளில் உள்ள அழுக்குகளால் சிறுநீரக தொற்றுகள், மூச்சு பிரச்னை, தோல் நோய் உள்ளிட்டவை ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பணத்தை தொட்டால் அபாயம்"
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: தொற்றுநோய்கள் பரவும் அபாயம்புதிய ரூபாய் நோட்டு
Related Content
புதிய ரூ.500, 2000 நோட்டுகளை அச்சடிக்க ரூ.7,965 கோடி செலவானது - மத்திய நிதியமைச்சர்
By
Web Team
December 19, 2018